அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை  கேட்டறியும் நடவடிக்கை இன்று கண்டி,கம்பஹாவில்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்று கண்டி,கம்பஹாவில்

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை இன்று கண்டி,கம்பஹாவில்

எழுத்தாளர் Staff Writer

01 Feb, 2016 | 8:58 am

அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கண்டி மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களில் மக்களிடம் கருத்து கேட்டறிதல் நடவடிக்கை இன்று (01) ஆரம்பிக்கப்படவுள்ளது.

கண்டி மற்றும் கம்பஹா மாவட்ட செயலகங்களில் இன்றும் நாளையும் இந்த நடவடிக்கை
முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜயநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

காலை 9.30 தொடக்கம் மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொலைப்பேசி, பெக்ஸ், மின்னஞ்சல் மற்றும் தபாலினூடாகவும் மக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க முடியும் எனவும் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.

0112 43 76 76 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அல்லது 0112 32 87 80 என்ற பெக்ஸ் இலக்கத்தின் ஊடாக அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான மக்களின் கருத்துகளை கேட்டறியும் குழுவுடன் தொடர்புகொள்ள முடியும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதம் 29 ஆம் திகதியுடன் அனைத்து மாவட்டங்களிலும், மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நடவடிக்கைகளை நிறைவு பெறவுள்ளதாக அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களை கேட்டறியும் குழுவின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி லால் விஜயநாயக்க சுட்டிக்காட்டினார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்