மஞ்சள் கடவையில் இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

மஞ்சள் கடவையில் இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

மஞ்சள் கடவையில் இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2016 | 11:58 am

மஞ்சள் கடவையில் இடம்பெறும் விபத்துக்களை தவிர்ப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்று நாளை (01) முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

முதற்கட்டமாக கொழும்பு மாநகர சபையின் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து, மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் காணப்பட்டும் பாதுகாப்பற்ற நிலைமைகள் குறித்து ஆராயப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் கலாநிதி சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் மஞ்சள் கடவையில் இடம்பெற்ற விபத்துக்களில் 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளமையை சுட்டிக்காட்டியுள்ள அவர், இதன் காரணமாக பாதுகாப்பற்ற வீதி கடவைகள் குறித்து கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தொடர்ந்து நாளைய தினமும் விசேட கண்காணிப்புகளை மேற்கொண்டு அதன் அடிப்படையில் மஞ்சள் கடவையை பாதுகாப்பாக பயன்படுத்துவது தொடர்பான திட்டத்தை அமுல்படுத்தவுள்ளதாக சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்