சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2016 | 11:36 am

கடந்த காலங்களில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது சுமார் 850 வெற்றிடங்கள் காணப்படுவதாக திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நிறைவேற்று அதிகாரிகள் 150 பேருக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆளனி பற்றாகுறை காரணமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சினூடாக நிதி கிடைக்கும் பட்சத்தில் விரைவில் வெற்றிடங்கள் நிரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்