சாய்ந்தமருதில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

சாய்ந்தமருதில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

சாய்ந்தமருதில் வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2016 | 4:21 pm

அம்பாறை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது அல் அமான் வீதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதிதாக நிர்மாணிக்கப்படும் வீடொன்றின் வளாகத்தில் அமைந்துள்ள மலசலக்கூட குழியொன்றிலிருந்து கழிவுகளை அகற்றிய போதே, ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது 16 கைத்துப்பாக்கி ​தோட்டாக்கள் , 13 வெற்றுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைக்குண்டொன்றும், 33 டி 56 துப்பாக்கி தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்