ஐந்து மாத சிசுவை ரயிலில் இருந்து தூக்கி எறிவதற்கு முற்பட்ட பெண் கைது

ஐந்து மாத சிசுவை ரயிலில் இருந்து தூக்கி எறிவதற்கு முற்பட்ட பெண் கைது

ஐந்து மாத சிசுவை ரயிலில் இருந்து தூக்கி எறிவதற்கு முற்பட்ட பெண் கைது

எழுத்தாளர் Staff Writer

31 Jan, 2016 | 9:39 am

மொரட்டுவ பகுதியில் 5 மாத சிசுவை ரயிலில் இருந்து தூக்கி எறிவதற்கு பெண்னொருவர் முயற்சித்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெண், சிசுவை ரயிலில் இருந்து வீச முற்படுவதாக கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த பெண் நேற்று (30) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

லுனாவ பகுதியை சேர்ந்த 28 வயதான பெண்னொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

குறித்த பெண்ணையும் சிசுவையும் மொரட்டுவ நீதவான் முன்னிலையில் இன்று (31) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மொரட்டுவ பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்