CSN அலைவரிசையின் பிரதம அதிகாரியிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை

CSN அலைவரிசையின் பிரதம அதிகாரியிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை

CSN அலைவரிசையின் பிரதம அதிகாரியிடம் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2016 | 12:18 pm

CSN அலைவரிசையின் பிரதம அதிகாரி ரொஹான் வெலிவிட்ட உள்ளிட்ட சிலர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

CSN அலைவரிசையின் பணிப்பாளர் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கவிஷால் திசாநாயக்க நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினுள் அழைத்துச்செல்லப்பட்டு சற்று நேரத்தில் மீண்டும் பொலிஸ் வாகனத்தில் வெளியில் அழைத்துச்செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் கூறினார்.

இதுதவிர அந்த அலைவரிசையின் பணிப்பாளர்கள் எனக் கருதப்படும் ஜயசிறி பெர்னாண்டோ மற்றும் நிஷாந்த ரணதுங்க ஆகியோரும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினுள் காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்