2016 ஆம் ஆண்டு பெறுபேறுகளைத் தரும் வருடமாக அமையும்: அல்ஜஸீராவிற்கான நேர்காணலில் ஜனாதிபதி

2016 ஆம் ஆண்டு பெறுபேறுகளைத் தரும் வருடமாக அமையும்: அல்ஜஸீராவிற்கான நேர்காணலில் ஜனாதிபதி

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2016 | 9:28 pm

ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதிகளுக்கு தண்டனை வழங்குவதில் நிலவும் தாமதம் குறித்து அல்ஜஸீரா ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, 2016 ஆம் ஆண்டு அதற்கான பெறுபேறுகளைத் தரும் வருடமாக அமையும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்தார்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில் இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தப்படவில்லை எனவும் மனித உரிமை மீறல்கள் குறித்தே அதில் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி இந்த நேர்காணலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பிரேரணையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் அங்கத்துவ நாடு என்ற வகையில், இலங்கை கட்டுப்பட்டுள்ளதாகவும் அல்ஜஸீராவிற்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கை இராணுவம் மாத்திரமல்ல, விடுதலைப்புலிகள் அமைப்பினரும் போரின்போது அழிவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தவறிழைத்தவர்களைக் கண்டறியும்போது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்