லெபனானில் தடுத்து வைக்கப்பட்ட இஸ்ரேலிய கழுகு விடுதலை

லெபனானில் தடுத்து வைக்கப்பட்ட இஸ்ரேலிய கழுகு விடுதலை

லெபனானில் தடுத்து வைக்கப்பட்ட இஸ்ரேலிய கழுகு விடுதலை

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2016 | 4:22 pm

இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்பட்டு லெபனானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கழுகு ஒன்று விடுவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய கழுகு ஒன்று இஸ்ரேலிய எல்லையைக் கடந்து தெற்கு லெபனானுக்குள் பறந்தது.

அந்தக் கழுகு லெபனானில் இறங்கியபோது டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் அடையாள அட்டை அதன் கால்களில் கட்டப்பட்டிருந்தமை தெரியவந்தது.

அத்தோடு, அந்தக் கழுகு இருக்கும் இடத்தை அறிந்து கொள்வதற்கான கருவி ஒன்றும் அதனுடன் பொருத்தப்பட்டிருந்தது.

இரு நாட்டு எல்லைப் பகுதியில் நிலைகொண்டுள்ள ஐ.நா. அமைதிப்படை வீரர்கள் நடத்திய சிக்கலான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அந்தக் கழுகு விடுவிக்கப்பட்டது என இஸ்ரேலிய வனவிலங்கு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், அந்தக் கழுகு உளவு பார்க்கும் நடவடிக்கைகள் எதிலும் ஈடுபட வரவில்லை என்பது தெளிவாகத் தெரிந்த பிறகு, அது தரையிறங்கிய கிராமத்து மக்களே அதை விடுவித்துவிட்டனர் என லெபனானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்