யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்: இணைத்தலைவர்கள் நியமனம் தொடர்பில் விக்னேஸ்வரன் விசனம்

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்: இணைத்தலைவர்கள் நியமனம் தொடர்பில் விக்னேஸ்வரன் விசனம்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2016 | 10:05 pm

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்றைய கூட்டம் நடைபெற்றது.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாள் இணைத்தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் இணைத்தலைவர்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படுகின்றமை தொடர்பில் வடமாகாண முதலமைமைச்சர் இன்றும் விமர்சனம் வெளியிட்டார்.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் விவசாயம், சகாதாரம், நீர் விநியோகம், மீள்குடியேற்றம் ஆகிய விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது

இதேவேளை, வடமாகாண அமைச்சர் பா.டெனீஸ்வரன், வட பகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்