மாவத்தகமயில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விதம் பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்தது

மாவத்தகமயில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விதம் பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்தது

மாவத்தகமயில் 13 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட விதம் பிரேதப் பரிசோதனை மூலம் தெரியவந்தது

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2016 | 7:55 am

மாவத்தகம, தல்கஸ்பிட்டியவில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட பின்னர், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சிறுமியின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை குருநாகல் சட்ட வைத்திய அதிகாரியினால் நேற்று (29) நடத்தப்பட்டிருந்தது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சட்ட வைத்திய அதிகாரியினால் இந்த தகவல்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுமியின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிலெஸ்ஸ நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவத்தகம, தல்கஸ்பிட்டிய பகுதியைச் சேர்ந்த காளிமுத்து விஜேகுமாரி என்ற 13 வயதான சிறுமி, அவரது வீட்டிற்கு 700 மீற்றர் தொலைவிலுள்ள மற்றுமொரு வீட்டிலிருந்து நேற்று (28) முன்தினம் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்