மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபையின் அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் செயலமர்வு

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபையின் அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் செயலமர்வு

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2016 | 10:09 pm

மட்டக்களப்பு மாவட்ட கூட்டுறவு சபையின் அபிவிருத்தி தொடர்பான அறிவூட்டல் செயலமர்வு இன்று இடம்பெற்றது.

இந்த செயலமர்வு மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கூட்டுறவு சபைகளை அபிவிருத்தி செய்தல் தொடர்பில் கூட்டுறவு ஊழியர்கள் இதன்போது தெளிவூட்டப்பட்டனர்.

இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் அமீர் அலி, பாராளுமன்ற உறுப்பினர்களாக சீனித்தம்பி யோகேஸ்வரன், எஸ்.ஶ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு கூட்டுறவு சபையினரால் கௌரவிக்கப்பட்டனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்