ஜெனீவா பிரேரணையை மீள கலந்துரையாடலுக்கு உட்படுத்துமாறு பான் கீ மூன் வேண்டுகோள் – ஸ்டெபான் டுஜாரிக்

ஜெனீவா பிரேரணையை மீள கலந்துரையாடலுக்கு உட்படுத்துமாறு பான் கீ மூன் வேண்டுகோள் – ஸ்டெபான் டுஜாரிக்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2016 | 8:51 pm

இலங்கையின் மனித உரிமைகள் விசாரணை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் நாளாந்த ஊடகவியலாளர் சந்திப்பில், ஐ.நா. செயலாளர் நாயகத்தின் ஊடகப் பேச்சாளர் ஸ்டெபான் டுஜாரிக் கருத்துத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]இடைக்கால விசாரணைப் பொறிமுறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பில் இலங்கைக்குள் இடம்பெறும் கலந்துரையாடல் குறித்து செயலாளர் நாயகம் அறிந்துள்ளார். தேசிய மட்டத்தில் ஆலோசனைகளை வழங்குவதற்கான விரிவான சட்ட வியூகமொன்று அந்த பொறிமுறையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆலோசனை செயற்பாடுகள் ஆரம்பமாகவுள்ளன. அத்துடன், இலங்கையின் தற்போதைய அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய ஜெனீவா பிரேரணையை மீள கலந்துரையாடலுக்கு உட்படுத்துமாறு செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த பிரேரணையிலேயே நம்பகத்தன்மையுடன் கூடிய நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டிற்கான நீதிமன்றப் பொறிமுறையில் சர்வதேச பொறிமுறையொன்றின் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்