English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Jan, 2016 | 10:58 am
நாட்டில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மோசடி தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கையை அடுத்த வாரத்தில் வெளியிடுவதற்கு எண்ணியுள்ளதாக அது குறித்து விசாரிப்பதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவரடங்கிய குழு தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பான தகவல்கள் தற்போது கிடைத்தவண்ணமுள்ளதாக அந்த குழுவின் தலைவரான சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்த பண்டார குறிப்பிட்டார்.
கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த மோசடி வியாபாரம் குறித்து எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகளை அமைச்சுக்கு பரிந்துரைசெய்ய விசாரணைக்குழு திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மோசடிகள் இடம்பெற்றுள்ளமை குறித்து உறுதியாக கூறமுடியாதுள்ள போதிலும், அவ்வாறு இடம்பெற்றிருப்பதற்கான சூழ்நிலைகள் குறித்து தகவல்கள் பதிவாகியுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உதவிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் வைத்தியசாலைகள் சிலவற்றிற்கு நேரடியாக சென்று தகவல்களை திரட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சுகாதார அமைச்சின் 2 உதவிப் பணிப்பாளர் நாயகங்கள், சிரேஷ்ட பிரதி செயலாளர், பணிப்பாளர் மற்றும் வைத்தியர் ஆகியோர் ஐவரடங்கிய விசாரணைக் குழுவில் அடங்கியுள்ளனர்.
08 Jul, 2022 | 04:26 PM
16 May, 2022 | 02:58 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS