கஹவத்தையில் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கஹவத்தையில் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு

கஹவத்தையில் நீர்வீழ்ச்சியில் வீழ்ந்து இரு இளைஞர்கள் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2016 | 8:21 am

கஹவத்த பெல்மடுல்ல பிரதேசத்தில் நீர்வீழ்ச்சியொன்றில் வீழ்ந்து 2 இளைஞர்கள் உயிரிந்துள்ளனர்.

பெல்மடுல்ல, தெனவக பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றில் குளிப்பதற்காக நேற்று (29) பிற்பகல் 4 இளைஞர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது அவர்கள் மதுவருந்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கியபோது அவரைக் காப்பாற்ற முயன்ற மற்றைய இளைஞரும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

19 மற்றும் 21 வயதான 2 இளைஞர்களே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

பெல்மடுல்ல, பெல்பொல பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்