உண்மையைக் கூறுவது ஜனாதிபதியா, பிரதமரா: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் நாமல்

உண்மையைக் கூறுவது ஜனாதிபதியா, பிரதமரா: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் நாமல்

உண்மையைக் கூறுவது ஜனாதிபதியா, பிரதமரா: மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார் நாமல்

எழுத்தாளர் Bella Dalima

30 Jan, 2016 | 8:05 pm

உண்மையைக் கூறுவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவா என்பதை நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

நேற்று (29) பெலியத்த, ரம்புக்கெட்டிய விகாரையில் கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்தும் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

[quote]ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜெனிவா சென்று ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திட்டுள்ளார். போர் குற்றச்சாட்டு வழக்கில் எமது இராணுவத்தினரை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்கின்றனர். BBC ஊடகத்திற்கு சொல்கின்றார்கள் இல்லை அவ்வாறு நடக்க நாம் இடம் கொடுக்க மாட்டோம் என்று. அவ்வாறு ஒன்று நடக்காமல் இருந்தால் நல்லதே. ஆனால், ரணில் விக்ரமசிங்க அந்த ஒப்பந்தத்தில் உள்ள அனைத்தையும் நாம் பின்பற்றுகின்றோம் என்று சேனல் 4 க்கு கூறியிருக்கிறார். நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள் உண்மையைக் கூறுவது ஜனாதிபதி சிறிசேனவா, விக்கிரமசிங்கவா என்று.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்