இலங்கை இராணுவம் சர்வதேச  சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளது – ஜனாதிபதி

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளது – ஜனாதிபதி

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளது – ஜனாதிபதி

எழுத்தாளர் Staff Writer

30 Jan, 2016 | 10:32 am

இலங்கை இராணுவம் சர்வதேச சட்டங்கள் மற்றும் இலங்கையின் சட்டங்களுக்கு அமைவாகவே செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அல்​ஜஸீரா தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

யுத்தத்தின் போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக விடுதலைப் புலிகள் ஒருபோதும் செயற்படவில்லை என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இராணுவம் இந்த நியமங்களை மதித்து அனைத்து சந்தர்ப்பங்களிலும் செயற்பட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கைகளின்போது பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த எவரேனும் ஒருவரினால் தவறிழைக்கப்பட்டிருந்தால், அதுகுறித்து விசாரணைப் பொறிமுறைக்குள் கண்டறியப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தவறிழைத்தமை கண்டறியப்படுமாயின், அதனுடன் தொடர்புடையவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை இதற்கு முன்னரும் தாம் தெளிவாக எடுத்துக்கூறியிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல் ஜஸீராவுடனான நேர்காணலின் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்