வைனை நீக்காததால் பிரான்ஸ் அதிபருடனான விருந்தைத் தவிர்த்தார் ஈரான் அதிபர்

வைனை நீக்காததால் பிரான்ஸ் அதிபருடனான விருந்தைத் தவிர்த்தார் ஈரான் அதிபர்

வைனை நீக்காததால் பிரான்ஸ் அதிபருடனான விருந்தைத் தவிர்த்தார் ஈரான் அதிபர்

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2016 | 4:55 pm

விருந்து உபசாரத்தின் போது உணவுப் பட்டியலிலிருந்து வைனை (Wine) அகற்ற மறுத்ததால் பிரான்ஸ் அதிபருடனான விருந்தைத் தவிர்த்துள்ளார் ஈரான் அதிபர்.

ஈரான் மீதான பொருளாதாரத் தடையை மேற்கத்திய நாடுகள் சமீபத்தில் விலக்கிக்கொண்டன.

இதையடுத்து, வர்த்தக உறவை மேம்படுத்தும் நோக்கில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகனி, சமீபத்தில் பிரான்ஸ் சென்றிருந்தார்.

பிரான்ஸ் அதிபர் பிரான்கோயிஸ் ஹாலண்டேவுடன் பல வர்த்தக ஒப்பந்தங்களில் ஹசன் ரவுகனி கையெழுத்திட்டார்.

இதனையடுத்து, இரு நாட்டு அதிபர்களும், பாரீஸ் நகரத்தில் விருந்து உண்ண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், விருந்து ஹலால் முறைப்படி இருக்க வேண்டும் என்ற கோரிக்கை ஹசன் ரவுகனி தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டது.

மேலும், உணவுப் பட்டியலில் வைன் இடம்பெறக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. மேலை நாடுகளில் வைன் கௌரவமிக்க பானமாகக் கருதப்படுவதால் அதை நீக்க பிரான்ஸ் மறுத்துவிட்டது. இதனால், விருந்து நிகழ்ச்சியை ஹசன் ரவுகனி இரத்து செய்துவிட்டாராம்.

ஆனால், சமீபத்தில் ஈரான் அதிபர் ஹசன் ரவுகனி இத்தாலி சென்றிருந்தபோது, அவர் கேட்டுக்கொண்டபடி அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்