முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2016 | 1:29 pm

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்றும் ஆஜராகினார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது சுயாதீன தொலைக்காட்சியில் ஔிபரப்பான தேர்தல் பிரசார விளம்பரங்களில் இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பிலான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட குறிப்பிட்ட தேர்தல் பிரசார விளம்பரங்களுடன் தொடர்புடைய தரப்பினர், சம்பவம் தொடர்பில் தங்களின் சாட்சியங்களை வழங்குவதற்காக காலஅவகாசம் கோரியிருந்தனர்.

இதன் பிரகாரம் பெப்ரவரி மாதம் 18, 19, 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் இதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்தார்.

குறிப்பிட்ட நான்கு நாட்களில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை முழுமையாக நிறைவுசெய்வதற்கு எண்ணியுள்ளதாக பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்