மாவத்தகம சிறுமி கொலையுடன் தொடர்புடையவர் கைது

மாவத்தகம சிறுமி கொலையுடன் தொடர்புடையவர் கைது

மாவத்தகம சிறுமி கொலையுடன் தொடர்புடையவர் கைது

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2016 | 6:29 am

மாவத்தகம, தல்கஸ்பிட்டிய மொரொக் தோட்டப் பகுதியில் 13 வயது சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் வெல்லவ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் வசித்துவந்தவர் எனவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

மாவத்தகம, தல்கஸ்பிட்டிய மொரொக் தோட்டப் பகுதியைச் சேர்ந்த விஜகுமாரி என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமியின் வீட்டிலிருந்து சுமார் 700 மீற்றர் தொலைவிலுள்ள மற்றுமொரு வீ்ட்டிலிருந்து நேற்றிரவு 7 மணியளவில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான நீதவான் விசாரணை நேற்று இரவு இடம்பெற்றது.

சிறுமியின் சடலம் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளர் தலைமறைவாகியுள்ளதாக பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சிறுமி நேற்று காலை முதல் காணமற்போயுள்ள நிலையில், சடலமாக அவர் மீட்கப்பட்ட பின்னரே தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சடலம் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டின் முன்பகுதியில் இரத்தக்கறைகள் காணப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் நில விரிப்பொன்றினால் சுருட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மாவத்தகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்