பேஸ்புக்கில் இனி 6 புதிய உணர்ச்சிகளுடன் ”லைக்” செய்யலாம்!

பேஸ்புக்கில் இனி 6 புதிய உணர்ச்சிகளுடன் ”லைக்” செய்யலாம்!

பேஸ்புக்கில் இனி 6 புதிய உணர்ச்சிகளுடன் ”லைக்” செய்யலாம்!

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2016 | 4:25 pm

சிரிப்பு, கோபம், வருத்தம், ஆச்சரியம், அன்பு, அழைப்பு என 6 வித்தியாசமான உணர்ச்சிகளை பேஸ்புக்கின் லைக் பொத்தானோடு இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தளமாக இருப்பதாலேயே பேஸ்புக் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக உருவெடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை பேஸ்புக்கின் காலாண்டு வருமான அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது 6 புதிய உணர்ச்சி லைக் பொத்தான்களை இணைக்கவுள்ளதாக மார்க் ஷக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

[quote]பேஸ்புக்கின் பிரத்தியேக அடையாளமான கையை உயர்த்தும் சின்னம், லைக் பொத்தானாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு விஷயத்தை மக்கள் பார்க்கும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த லைக் பொத்தான் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைத்து விதமான உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இதன் மூலம் மக்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் அதிக நேரம் உணர்வுப்பூர்வமாக சமூக ஊடகங்களில் செலவிடுவார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுக்க இவற்றை அறிமுகப்படுத்தும் முன், எங்கள் பொறியாளர்கள் மேலும் சில உணர்ச்சிகளை உருவாக்க வேண்டும்.[/quote]

உணர்ச்சிகள் அடங்கிய பேஸ்புக்கின் புது முயற்சிகள் சிலி, பிலிப்பைன்ஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்