பிரதமர் ஊடக நிறுவனங்களுக்கு விடுத்த அச்சுறுத்தலைக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவிப்பு

பிரதமர் ஊடக நிறுவனங்களுக்கு விடுத்த அச்சுறுத்தலைக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2016 | 9:31 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு நேற்று விடுத்த அச்சுறுத்தலைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாக சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பத்திரிகையாளர் சங்கங்கத்திற்கும், பத்திரிகைகளுக்கும், இலத்திரனியல் ஊடகங்களுக்கும், அந்த ஊடகங்களில் பணியாற்றும் சில ஊடகவியலாளர்களுக்கும், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் குற்றம் சுமத்தியமை தொடர்பில் அதிருப்தி அடைவதாக சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பிரதமர் என்ற வகையில் அவ்வாறான நடத்தையை நாம் எதிர்பார்க்கவில்லையென அந்த இயக்கம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊடக பயன்பாடு தொடர்பில் சிக்கல் நிலைமை இருக்குமாயின் அதனை ஊட சமூகத்துடன் கலந்துரையாடி தீர்த்துக்கொண்டிருக்க வேண்டும் எனவும் சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

அதற்குப் பதிலாக செய்தி ஆசிரியர்கள் சங்கத்தை, ஊடக நிறுவனங்களை அல்லது ஊடகவியலாளர்களை சாடிப் பேசுவது பாரிய அச்சுறுத்தல் எனவும் சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்