ஜனாதிபதி தலைமையில் மேல் மாகாண பெருநகர அபிவிருத்தித் திட்டம் அங்குரார்ப்பணம்

ஜனாதிபதி தலைமையில் மேல் மாகாண பெருநகர அபிவிருத்தித் திட்டம் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2016 | 8:19 pm

மேல் மாகாண பெருநகரத்திட்ட ஆரம்ப விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

மேல் மாகாண பெருநகரத் திட்டத்தின் ஆரம்ப விழாவைக் குறிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாக மரமொன்றை நட்டார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கன்று ஒன்றை நட்டார்.

சர்வமத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் ஆரம்பிக்கப்பட்ட வைபவத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதி தெரிவித்ததாவது;

[quote]தற்காலத்திற்கு ஏற்றவாறு எமது நாட்டைக் கட்டியெழுப்பும் வகையில், அழகான நகரமொன்றை உருவாக்குகின்றோம். அந்த நகரில் நற்பண்புள்ள பிரஜைகளை உருவாக்குவதே நோக்கமாகும். அழகான பிரஜைகள் என்பதில் உடல் நிறம், வெளிப்புறத் தோற்றம் மாத்திரமல்ல. திடகாத்திரமான தேகம் மாத்திரமல்ல, உளநலமுடைய ஆன்மீக ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ள பண்புள்ள பிரஜைகளை உருவாக்குவதே எமது நோக்கமாகும். பெருநகரங்கள் போன்றே நாட்டின் பௌதீக வள அபிவிருத்தி மற்றும் நற்பண்புகளை மேம்படுத்தி ஒழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்கும் நடவடிக்கையில் அரசாங்கம் என்ற வகையில் நாம் ஈடுபட்டுள்ளோம்.[/quote]

என்றார்.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களை ஒன்றிணைத்து இந்த மெகாபொலிஸ் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதற்காக 40 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார சுபீட்சம், சமூக நியாயம், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் ஆன்மீக மேம்பாடுள்ள பிரஜைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

10 பிரதான திட்டங்களின் கீழ் 150 செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இதன்மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

12631543_10153788141851327_3259066547539180292_n

12645269_10153788142061327_3545874642536360629_n


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்