சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

சுப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2016 | 5:18 pm

ஆஷ்ரம் பாடசாலை நிலம் குறித்த வழக்கு விசாரணைக்காக சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் அவரது மனைவி லதா ரஜினி ஆகியோருக்கு சொந்தமான ஆஷ்ரம் மெட்ரிகுலேஷன் பாடசாலை இயங்கி வருகிறது.

இந்தப் பாடசாலை அமைந்துள்ள நிலம் தொடர்பான பிரச்சினையில் வெங்கடேசவரலு என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கில், சுப்பர் ஸ்டார் ரஜினி, அவரது மனைவி லதா ரஜினி மற்றும் பாடசாலை முதல்வர் வந்தனா ஆகிய மூன்று பேரையும் கல்வித்துறை இணை இயக்குனர் முன்பு ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால், இதை எதிர்த்து ஆஷ்ரம் பாடசாலை முதல்வர் வந்தனா மனு தாக்கல் செய்திருந்தார்.

இவ்விரு வழக்குகள் மீதான விசாரணை தற்போது இடம்பெற்று வருகின்றது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்