கிளி. ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: காணி அபகரிப்பை இடைநிறுத்துவது குறித்து கலந்துரையாடல்

கிளி. ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்: காணி அபகரிப்பை இடைநிறுத்துவது குறித்து கலந்துரையாடல்

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2016 | 10:01 pm

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது.

நான்கு இணைத் தலைமைகளின் கீழ் இன்று நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளன.

பூநகரி மற்றும் விசுவமடு பகுதியில் இடம்பெறும் காணி அபகரிப்பை இடைநிறுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பூனகரி கடற்பிராந்தியத்தில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி மற்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சிக்கான பேருந்து நிலையம் அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்தல் மற்றும் பூநகரி பிரதேசத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்