கம்பஹா, பெம்முல்ல ரயில் கடவை ஊழியர் ரயிலில் மோதி பலி

கம்பஹா, பெம்முல்ல ரயில் கடவை ஊழியர் ரயிலில் மோதி பலி

கம்பஹா, பெம்முல்ல ரயில் கடவை ஊழியர் ரயிலில் மோதி பலி

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2016 | 6:14 am

கம்பஹா, பெம்முல்ல ரயில் கடவையில், கடமையில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுடன், பெம்முல்ல ரயில் கடவையில் காவலாளியாக கடமையாற்றிய ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே இந்த நபர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

ரயில் பாதையின் மேற்பார்வை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அத்தனகல்ல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே ரயில் விபத்தில் உயிரழந்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்