கடந்த வருடம் அதிகளவு வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் இவை தான்

கடந்த வருடம் அதிகளவு வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் இவை தான்

கடந்த வருடம் அதிகளவு வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்கள் இவை தான்

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2016 | 8:26 am

உலக அளவில் அதிக வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம் என்ற பெயரை தொடர்ந்து 4 ஆவது முறையாக பிடித்துள்ளது ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம்.

2015 ஆம் ஆண்டில் மொத்தமாக 10.15 மில்லியன் கார்களை விற்பனை செய்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் விற்பனையில் 4 ஆவது முறையாக முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியானவுடன் டொயோட்டா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 3.80 சதவீதம் உயர்ந்தது.

டொயோட்டாவுக்கு அடுத்தப்படியாக மாசுக் கட்டுப்பாட்டில் மோசடி செய்ததாக சர்ச்சையில் சிக்கிய வோல்ஸ்வேகன் நிறுவனம் இடம் பெற்றுள்ளது. வோல்ஸ்வேகன் நிறுவனம் உலகம் முழுவதும் 9.93 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

மூன்றாவது இடத்தில் அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் உள்ளது. இந்த நிறுவனம் 2015 ஆம் ஆண்டில் 9.8 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்து உள்ளது.

எனினும் டொயோட்டா நிறுவனம் 2014 ஆம் ஆண்டில் 10.23 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிசான் நிறுவனம் 8.22 மில்லியன் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹையுன்டை நிறுவனம் 8.01 மில்லியன் வாகனங்களை உற்பத்தி செய்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்