ஊடகங்கள் தொடர்பான கருத்திற்கு விளக்கமளித்தார் பிரதமர்

ஊடகங்கள் தொடர்பான கருத்திற்கு விளக்கமளித்தார் பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

29 Jan, 2016 | 8:37 pm

ஊடகங்கள் குறித்து பாராளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று மீண்டும் தெளிவுபடுத்தினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது;

[quote]நேற்று நான் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் பின்னர் இந்த சபையில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நான் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியதாகக் கூறியுள்ளார். நான் அச்சுறுத்தல் விடுக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயக்கொடியின் பெயரை நான் குறிப்பிட்டேன். அதன் பின்னால் யார் உள்ளனர் என்பதனை அறியும் உரிமை எமக்கு உள்ளது. தகவல் அறியும் சட்டத்தைக் கொண்டுவருவதாக இவர்கள் குறிப்பிடுகின்றனர். அதனைக் கொண்டுவந்த பின்னர் மேலும் தகவல்களை அறிந்து கொள்ளுங்கள். எவரையும் பெயரிட முடியும். இவர்களின் பெயரை மாத்திரம் குறிப்பிட முடியாது. ஐலண்ட் பத்திரிகை எவ்வளவு தூரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதனை நான் கூறினேன். இங்கு ஊடகத்திலும் உயர் குலத்தைப் போன்று சிலர் இருக்கின்றனர். குலங்கள் தொடர்பிலான பிரிவுகளை பிரம்மனே வகுத்தார். பிரம்மன் உருவாக்கிய உயர் குலத்தைச் சேர்ந்தவர்களைப் போன்றிருந்த ஊடகங்களில் சிலர் தற்போது தாழ்த்தப்பட்டவர்களின் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஊடக சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் இருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பத்திரிகைகளில் பிரசுரிக்க முடியும் என்றால் ஏன் நாங்கள் ஊடகவியலாளர்களின் பெயர்களைக் கூற முடியாது.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்