இலங்கையிலுள்ள படகுகளை விடுவிக்குமாறு கோரி காரைக்கால் துறைமுகத்தில் முற்றுகை ஆர்ப்பாட்டம்

இலங்கையிலுள்ள படகுகளை விடுவிக்குமாறு கோரி காரைக்கால் துறைமுகத்தில் முற்றுகை ஆர்ப்பாட்டம்

இலங்கையிலுள்ள படகுகளை விடுவிக்குமாறு கோரி காரைக்கால் துறைமுகத்தில் முற்றுகை ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2016 | 1:37 pm

இலங்கையிலுள்ள தமது படகுகளை விடுவிக்குமாறு கோரி தமிழகத்தின் காரைக்கால் துறைமுகத்தை முற்றுகையிட்டு ஆறு மாவட்ட மீனவர்கள் இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை அரசாங்கத்தினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமது விசைப்படகுகளையும், சிறையிலுள்ள மீனவர்களையும் விடுவிக்குமாறு கோரி தமிழகத்தின் நாகை, காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், புதுகோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் மீனவர்கள் காரைக்கால் துறைமுகத்தில் முற்றுகைப் போராட்டத்தை இன்று ஆரம்பித்துள்ளதாக திஇந்து செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 75 விசைப்படகுகளையும், தமிழக மீனவர்களையும் விடுவிக்கவேண்டும் என்றும், மீனவர் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பேச்சுகளை தொடங்க வேண்டும் எனவும் தமிழக மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மீனவர்களுக்கென தனியான அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், இலங்கையில் சேதமடைந்துள்ள தமது விசைப்படகுகளுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகளை வலியுறுத்தி கடந்த 24 ஆம் திகதி முதல் ஆறு மாவட்ட மீனவர்களும் தொடர் வேலை நிறுத்த்த்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 26 ஆம் திகதி இந்திய குடியரசு தினத்தன்று மீனவர்கள் நாகையில் உண்ணாவிரத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ராமேஸ்வரத்தில் ஐந்தாம் நாளாக நேற்றும் 800 க்கும் அதிகமான விசைப்படகுகள் கடலுக்குச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் மற்றுமொரு கட்டமாக காரைக்கால் துறைமுகத்தை சாலை, இருப்புப் பாதை மற்றும் கடல் ஆகிய மூன்று வழித்தடங்களிலும் முற்றுகையிட்டு இன்று போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்