இந்திய மகளிர் அணி அவுஸ்திரேலியா உடனான தொடரை முதன்முறையாக வென்றது

இந்திய மகளிர் அணி அவுஸ்திரேலியா உடனான தொடரை முதன்முறையாக வென்றது

இந்திய மகளிர் அணி அவுஸ்திரேலியா உடனான தொடரை முதன்முறையாக வென்றது

எழுத்தாளர் Staff Writer

29 Jan, 2016 | 1:58 pm

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி விளையாடி வருகின்றது.

இவ்விரு அணிகளுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்த நிலையில், 2 ஆவது போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 18 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களைக் குவித்த போது மழை குறுக்கிட்டது. இதையடுத்து டக்வெர்த் லூவிஸ் முறைப்படி 10 ஓவரில் 66 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு இந்திய மகளிர் அணிக்கு நிர்ணையிக்கப்பட்டது.

எளிய இலக்குடன் ஆட்டத்தை ஆரம்பித்த இந்திய அணி 9.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்த வெற்றியின் மூலம், 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.

இதன் மூலம், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை அதன் சொந்த மண்ணில் முதல் முறையாக வென்று இந்திய மகளிர் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. இவ்விரு அணிகளுக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் ஜனவரி 31 ஆம் தேதி சிட்னியில் நடைபெறுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்