பிரதமரும் ஜனாதிபதியும் ஒருவருக்கொருவர் முரண்படுவதாகக் கூறுகிறார் விமல் வீரவங்ச

பிரதமரும் ஜனாதிபதியும் ஒருவருக்கொருவர் முரண்படுவதாகக் கூறுகிறார் விமல் வீரவங்ச

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 9:57 pm

ஜெனிவாவில் இணக்கம் வெளியிட்டவாறு மே மாதமளவில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதாக பிரதமர் கூறியிருக்கின்றமையானது சிக்கல் நிலையைத் தோற்றுவித்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்தார்.

வெளிநாட்டு நீதிபதிகள் அங்கம் வகிக்கும் போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறை மீது தம்மால் நம்பிக்கைகொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பி.பி.சி சிங்கள சேவைக்கு தெரிவித்திருந்தமையை சுட்டிக்காட்டிய விமல் வீரவங்ச, வெளிவிவகார அமைச்சர் என்ற வகையில், மங்கள சமரவீர நாட்டின் அரச தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வினவாமலேயா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் கலப்பு போர்க்குற்ற விசாரணைக்கு இணக்கம் தெரிவித்தார் எனவும் கேள்வி எழுப்பினார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்