பிரான்ஸில் தீவிரவாத வழக்குகளில் சிக்கியவர்களின் குடியுரிமையை பறிக்கும் புதிய சட்டமூலம்

பிரான்ஸில் தீவிரவாத வழக்குகளில் சிக்கியவர்களின் குடியுரிமையை பறிக்கும் புதிய சட்டமூலம்

பிரான்ஸில் தீவிரவாத வழக்குகளில் சிக்கியவர்களின் குடியுரிமையை பறிக்கும் புதிய சட்டமூலம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 1:30 pm

பிரான்ஸ் தலைநகரான பரிசில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 130 பேர் பலியான நிலையில் அந்நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பிராங்கோயிஸ் ஹாலண்டே தீர்மானித்தார்.

அதில் ஒருகட்டமாக, இரட்டை குடியுரிமையுடன் பிரான்சில் வசித்து, தீவிரவாத வழக்குகளில் தண்டனை பெற்றவர்களின் குடியுரிமையை ரத்து செய்யும் வகையில் புதிய சட்டத்தை கொண்டுவர அரசு முடிவு செய்தது.

இந்த சட்டமூலம் மீது பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுவரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் நீதி அமைச்சர் கிறிஸ்டியானே டவுபிரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அவரது இராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதுடன் புதிய அமைச்சராக ஜீன் ஜாக்குவெஸ் உர்வோஆஸ் பதவி ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்