தேரர்களுக்கான சட்டம் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட ஒன்றல்ல – ஹெட்டிகல்லே விமலசார தேரர்

தேரர்களுக்கான சட்டம் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட ஒன்றல்ல – ஹெட்டிகல்லே விமலசார தேரர்

தேரர்களுக்கான சட்டம் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட ஒன்றல்ல – ஹெட்டிகல்லே விமலசார தேரர்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 10:39 pm

தேரர்களுக்கான சட்டம் தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

இதன்போது, தேரர்களுக்கான சட்டம் விரிவாகக் கலந்துரையாடப்பட்ட ஒன்றல்ல எனவும் இந்த சட்டத்தை அடிப்படையாக வைத்து தேரர்கள் மத்தியில் ஒற்றுமையின்மை நிலவி வருவதாகவும் ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஹெட்டிகல்லே விமலசார தேரர் தெரிவித்தார்.

இதேவேளை, தகவல் அறியும் சட்டமூலம், தேசிய கணக்காய்வு சட்டம் போன்ற எந்தவொரு சட்டமும் முறையாகக் கொண்டுவரப்படாத பட்சத்தில் தேரர்களுக்கான சட்டத்திற்கு மாத்திரம் ஏன் அக்கறை காட்ட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஶ்ரீ வர்ணசிங்க கேள்வி எழுப்பினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்