தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மீது கல் வீச்சு; வீதியின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மீது கல் வீச்சு; வீதியின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மீது கல் வீச்சு; வீதியின் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 7:31 am

தெற்கு அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்கள் மீது கற்பிரயோகம் மேற்கொள்ளப்படுவதால் வீதியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அவசர பொலிஸ் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் பொலிஸாரின் எண்ணிக்கை குறித்த வீதியில் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு மற்றும் வாகனம் தொடர்பான பதில் பொலிஸ்மா அதிபர் அமரசிரி தெரிவித்துள்ளார்.

மேலதிகமாக தெற்கு அதிவேக வீதிக்கு அண்மித்த பிரதேசங்களிலும் பொலிஸ் நடமாட்டம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பதில் பொலிஸ்மா அதிபர் தெரிவித்தார்.

அதிவேக வீதியின் 21 ஆவது மைற்கல்லுக்கு அண்மையில் இருவர் வீதியில் பயணித்த வாகனங்கள் மீது கற்களை வீசியதாக முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் 6 வாகனங்கள் இதன் காரணமாக சேதமுற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்