துடுப்பெடுத்தாடும் போது வர்ணனையாளராகவும் செயற்பட்டதால் ஆட்டமிழந்த ஸ்மித்

துடுப்பெடுத்தாடும் போது வர்ணனையாளராகவும் செயற்பட்டதால் ஆட்டமிழந்த ஸ்மித்

துடுப்பெடுத்தாடும் போது வர்ணனையாளராகவும் செயற்பட்டதால் ஆட்டமிழந்த ஸ்மித்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 1:55 pm

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி நேற்று முன்தினம்(26) அடிலெய்டில் நடைபெற்றது. இதில் இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி செய்து 188 ஓட்டங்களைக் குவித்தது.

189 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய அவுஸ்திரேலியா 37 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அந்த அணியின் முக்கிய வீரர் ஸ்மித் 14 பந்தில் 21 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

ஸ்மித் துடுப்பெடுத்தாடும் போது ஆட்டத்தின் நிலவரம் பற்றி ஆடையில் பொருத்தப்பட்டிருந்த சிறிய மைக்கில் பேசியபடி துடுப்பெடுத்தாடினார். அருகில் களத்தடுப்பில் ஈடுபட்ட விராத் கோஹ்லி இதை கவனித்தப்படி இருந்தார்.

ஜடேஜா வீசிய ஓவரின் ஒரு பந்தை தூக்கி அடித்தார் ஸ்மித். இதனை அழகாக பிடியெடுத்த கோலி, ஸ்மித்தை பார்த்து பேசுவது போன்று சைகை செய்தார்.

இந்த சம்பவம் அவுஸ்திரேலியா கிரிக்கெட் ரசிகர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்மித் மைக்கில் பேசியபடி துடுப்பெடுத்தாடியதால் தான் ஆட்டமிழந்தார் என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனால், மைக்கில் பேசுவது ஆட்டத்தை பாதிக்காது என்றும், டி20 என்பது முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தொடர்புடையது என்றும் ஸ்மித்தின் சக வீரரான வோர்னர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்