சம்பூர் சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு

சம்பூர் சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு

சம்பூர் சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 10:38 pm

திருகோணமலை, சம்பூரில் கிணற்றினுள் இருந்து 6 வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் இதுவரை 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பூர் 7 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் குகதாஸ் தர்ஷன் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமற்போயிருந்த நிலையில், அன்றைய தினமே நள்ளிரவு வேளையில் பாழடைந்த கிணறு ஒன்றினுள் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்.

குறித்த கிணறு சம்பூர் கடற்படை முகாம் அருகிலுள்ள காணியில் உள்ளது.

நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலே சிறுவனின் மரணத்திற்குக் காரணம் என சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

எவ்வாறாயினும், சடலத்தின் வயிற்றுப் பகுதியில் கல்லொன்று கட்டப்பட்டிருந்ததால் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் நிலவுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் சம்பூர் பொலிஸார் இதுவரை 20 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளதுடன் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்