சம்பூர் சிறுவனின் மரணம்; தொடரும் மர்மம்

சம்பூர் சிறுவனின் மரணம்; தொடரும் மர்மம்

சம்பூர் சிறுவனின் மரணம்; தொடரும் மர்மம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 12:44 pm

திருகோணமலை சம்பூர் பகுதியில் பாழடைந்த கிணற்றிலிருந்து கல்லில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன் தொடர்பில் 20 பேரிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனைகளை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதோடு இறுதி சடங்குகள் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டது.

நீரில் மூழ்கியதால் ஏற்பட்ட மூச்சுத் திணறலில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பூர் ஏழாம் வட்டாரம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மாலையில் காணாமல் போன சிறுவன் நள்ளிரவு வேளையில் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டான்.

சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் வயிற்றுப் பகுதியில் கொங்கிரீட் கல் கட்டப்பட்டு காணப்பட்டது.

இதனை அடுத்து சிறுவனின் மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சம்பூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்