கோட்டாபய கைதாவதைத் தடுக்கும் மனு விசாரணையிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகல்

கோட்டாபய கைதாவதைத் தடுக்கும் மனு விசாரணையிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகல்

கோட்டாபய கைதாவதைத் தடுக்கும் மனு விசாரணையிலிருந்து உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன விலகல்

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 5:40 pm

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி தாக்கல்செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையிலிருந்து விலகுவதற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் பிரியந்த ஜயவர்தன தீர்மானித்துள்ளார்.

அவன்ற் கார்ட் சம்பவம், மிக் விமானக் கொள்வனவு மற்றும் லங்கா ஹொஸ்பிட்டல் நிறுவனத்தின் பங்கு விற்பனையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பில் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவின் விசாரணைகளையடுத்து, கைது செய்ய ஆயத்தமாவதாகத் தெரிவித்து இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்காக பிரியந்த ஜயவர்தன, பிரியசாத் டெப் மற்றும் உபாலி அபேரத்ன ஆகிய நீதியரசர்கள் குழாம் பெயரிடப்பட்டிருந்தது.

நீதியரசர் பிரியந்த டெப் விலகியதை அடுத்து, வழக்கு விசாரணையை இன்று முன்னெடுக்க முடியாமல் போனதுடன், அதுதொடர்பான விசாரணை மே மாதம் 25 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும், இந்த சம்பவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸ கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஈவா வனசுந்தர மற்றும் சரத் டி ஆப்ரூ ஆகிய நீதிபதிகள் இந்த இடைக்கால தடையுத்தரவைப் பிறப்பித்திருந்தனர்.

இதன்போதும், இந்த விசாரணைகளை முன்னெடுத்த நீதிபதிகள் குழாமிலிருந்து நீதிபதி புவனேக அலுவிஹாரே விலகியமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்