கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் மேலும் 4 அதிகாரிகளுக்கு இடம்மாற்றம்

கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் மேலும் 4 அதிகாரிகளுக்கு இடம்மாற்றம்

கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் மேலும் 4 அதிகாரிகளுக்கு இடம்மாற்றம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 7:13 am

கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தின் மேலும் நான்கு அதிகாரிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சிறுமி சேயா சதவ்மியின் கொலை சம்பவம் தொடர்பில் செயற்பட்ட விதம் தொடர்பில்
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து இவர்களுக்கான விசாரணைகள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இரண்டு பொலிஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் , பொலிஸ் சார்ஜன்ட் ஒருவருக்கும் மற்றும் பொலிஸ் காண்ஸ்டபில் ஒருவருக்கும் இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதே வேளை கொட்டதெனியாவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக செயற்பட்ட எஸ். ட்பளியூ. எஸ் உதயகுமாரிவிற்கு உடன் அமுலாகும் வகையில் கேகாலை பிராந்தியத்திற்கு நேற்று இடமாற்றம் வழங்கப்பட்டமை குறி்ப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்