கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்கு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்கு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்பதற்கு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 7:00 am

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு வருகை தருவதற்கு தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இராமேஸ்வரம் வட்டாராச்சியார் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது இந்த விடயம் அறிவிக்கப்பட்டதாக தி ஹிந்து செய்தி வெிளியட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து கச்சத்தீவு திருவிழாவிற்கு வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தின் போது சக்கத்தீவு செல்வதற்கு தமிழக விசைப்படகுகள் மறுப்பு தெரிவித்துள்ளமை குறித்து அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு அதற்கான அனுமதி பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக திருவிழா ஏற்பாட்டாளர் இராமேஸ்வரம் பங்குத் தந்தை சகாயராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளுக்கு திருவிழாவிற்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பங்குத்தந்தை கூறியுள்ளதாக தி ஹிந்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அடுத்த மாதம் பத்தாம் திகதிக்கு முன்னர் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் தங்களின் ஆவணங்களை உறுதிப்படுத்தி அனுமதியை பெற்றுக் கொள்ளுமாறு இராமேஸ்வர கோட்டாராச்சியார் ராம்தீபன் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்