இலங்கை விமான சேவை முறைகேடுகள் ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன் விசாரணைக்கு

இலங்கை விமான சேவை முறைகேடுகள் ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன் விசாரணைக்கு

இலங்கை விமான சேவை முறைகேடுகள் ஊழல் மோசடி ஜனாதிபதி ஆணைக்குழு முன் விசாரணைக்கு

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 1:05 pm

இலங்கை விமான சேவை நிறுவனத்தில் இடம் பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான முறைப்பாடு, பாரிய ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இந்த விசாரணைகளின் நிமித்தம் இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிசாந்த விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் ஆஜராக இருந்ததாக ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணகளுக்காக இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேகர நேற்று ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்துள்ளார்.

இதே வேளை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரசார நடவடிக்கைகளுக்கு அரச தொலைக்காட்சி சேவையை பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இன்று சாட்சி பதிவுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதன் நிமித்தம் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் பாரிய ஊழல் மற்றும் நிதி மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டீ சில்வா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கும் இன்றைய தினம் ஆணைக்குழு முன் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்