இந்த உருளைக்கிழங்கு புகைப்படத்தின் விலை 1 மில்லியன் யூரோக்கள்

இந்த உருளைக்கிழங்கு புகைப்படத்தின் விலை 1 மில்லியன் யூரோக்கள்

இந்த உருளைக்கிழங்கு புகைப்படத்தின் விலை 1 மில்லியன் யூரோக்கள்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 8:51 am

மிகச் சாதாரணமாக எடுக்கப்பட்ட ஒரு உருளைக்கிழங்கு புகைப்படம் சுமார் 1 மில்லியன் யூரோக்களுக்கு விற்பனையகியுள்ளது.

இது 2010 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம். இதில் இருப்பது அயர்லாந்து நாட்டில் விளைந்த செயற்கை (ஆர்கானிக்) உருளைக்கிழங்கு.

இந்த புகைப்படத்தின் உரிமையாளரான கெவின் அபோஷ் இடம் பெயர் குறிப்பிட விரும்பாத தொழிலதிபர் ஒருவர் உங்கள் புகைப்படத்தை பாரிசில் நடந்த கண்காட்சியில் பார்த்திருக்கிறேன் அதை வாங்கிக் கொள்ள ஆசைப்படுகிறேன் என்று கெவினின் வீட்டுக்கே வந்து கேட்க, கெவினும் சம்மதம் தெரிவிக்கவே சில தினங்களுக்கு பின்னர் 1 மில்லியன் யூரோ கொடுத்து அந்த தொழிலதிபர் இந்த புகைப்படத்தை விலைக்கு வாங்கிச் சென்றுள்ளார்.

ஹொலிவுட் பிரபலங்கள் ஜொனி டெப், ஸ்டீபன் ஸ்பீல்பெர்க், நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் போன்றவர்களை பிரத்யேகமாக புகைப்படமெடுத்த பிரபல புகைப்படக் கலைஞர்தான் கெவின் அபோஷ்ச்.

அதிக விலைக்கு விற்பனையான புகைப்படங்களின் வரிசையில் இந்த புகைப்படம் 15 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. முதலிடத்தில் 4.3 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனையான அணட்ரியாஸ் கர்ஸ்கி ஆல் பிடிக்கப்பட்ட “Rhein II” புகைப்படம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்