இணையத்தளம் வழியாக ஒளியின் வேகத்தில் தகவல் பரிமாற்றம் சாத்தியம்: ஆய்வு முடிவு

இணையத்தளம் வழியாக ஒளியின் வேகத்தில் தகவல் பரிமாற்றம் சாத்தியம்: ஆய்வு முடிவு

இணையத்தளம் வழியாக ஒளியின் வேகத்தில் தகவல் பரிமாற்றம் சாத்தியம்: ஆய்வு முடிவு

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 4:59 pm

மொபைல் போன்களில் அண்ட்ரோய்ட் செயற்படுவது போல, ஒப்டிக்கல் தொழில்நுட்ப உதவியுடன் இணையத்தளம் மூலம் ஒளியின் வேகத்தில் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும் என முதன்முறையாக ஆய்வு முடிவொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவிவரும் இணையத்தள உட்கட்டமைப்புப் பற்றாக்குறை பிரச்சினைக்கு இந்த ஆய்வு தீர்வாக அமையும் என நம்பப்படுகிறது.

தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பல்வேறு வகையான பயன்பாடு காரணமாக அதிகரித்து வரும் அலைவரிசைக்கான தேவைக்கும் இது தீர்வாக அமையும்.

“இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள ஹார்ட்வெயார் மற்றும் சொப்ட்வெயார் தொழில்நுட்பங்கள், ஒப்டிக்கல் இணைய உட்கட்டமைப்புத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும். ஒப்டிக்கல் வலையமைப்பில் உள்ள கடும் சிக்கல் தவிர்க்கப்பட்டு, புரோகிராமர்கள், செயலி உருவாக்குபவர்களுக்கு ஒளியின் வேகத்தில் செயற்படும் இணைய செயலிகளை உருவாக்க வாய்ப்பாக அமையும்”

என பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் மின்னியல், மின்னணுவியல் துறை பேராசிரியர் ரெசா நெஜபதி தெரிவித்துள்ளார்.

அதாவது, கூகுள் அண்ட்ரோய்ட் மற்றும் அப்பிள் iOS ஆகிய செயலிகளின் அடிப்படைச் செயற்பாட்டைப் போல புதிய தொழில்நுட்பம் செயல்படும் என கூறப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்