அரச சேவையில் இணைக்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

அரச சேவையில் இணைக்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

அரச சேவையில் இணைக்குமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

28 Jan, 2016 | 12:52 pm

அரச சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தி வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்கா வளாகத்திற்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறுகின்றார்.

அரசினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைய தங்களுக்கு நியமனம் வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, தமது கோரிக்கை அடங்கிய மகஜரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மட்டக்களப்பு மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்