”அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிதல் மே மாதத்தில் நிறைவுறும்” 

”அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிதல் மே மாதத்தில் நிறைவுறும்” 

”அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிதல் மே மாதத்தில் நிறைவுறும்” 

எழுத்தாளர் Bella Dalima

28 Jan, 2016 | 10:35 pm

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் கருத்துக்களைக் கேட்டறியும் குழு கொழும்பில் இன்று ஊடக சந்திப்பொன்றை நடத்தியது.

மக்கள் கருத்துக்களைக் கேட்டறியும் குழுவின் தலைவர் சட்டத்தரணி லால் விஜேநாயக்க இதன்போது தெரிவித்ததாவது,

[quote]18 ஆம் திகதியில் இருந்து 22 ஆம் திகதி வரை கொழும்பு மாவட்டத்தில் மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டுள்ளோம். இதுகுறித்து எமக்கு சுமார் 400 மின்னஞ்சல்கள் கிடைத்துள்ளன. அத்துடன், 140 எழுத்து மூல ஆவணங்களும், பெக்ஸ் மூலம் 170 ஆவணங்களும் கிடைத்துள்ளன. அதேபோன்று, கொழும்பில் நாம் மக்களிடம் இருந்து 5 நாட்கள் பகிரங்கமாக கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டோம். அதன் போது 258 பேர் கருத்துக்களை முன்வைத்துள்ளனர். மார்ச் மாதமாகும் போது இதனை நிறைவு செய்ய முடியும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.[/quote]

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்