2015 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மேலதிகமாக 373,712 பேர்  வாக்களிக்கத் தகுதி

2015 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மேலதிகமாக 373,712 பேர் வாக்களிக்கத் தகுதி

2015 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் மேலதிகமாக 373,712 பேர் வாக்களிக்கத் தகுதி

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 12:22 pm

2015 ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் 373,712 பேர் கடந்த வருடத்திலும் பார்க்க மேலதிகமாக வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் 2015 ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு அமைவாக 15,421,202 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளர்

2014 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் ஒரு கோடியே 15,047,490 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

2015 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பில் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கையே அதிகரித்துள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம் மொஹம்மட் தெரிவித்துள்ளார் .

1,680,887 பேர் கம்பஹா மாவட்டத்தில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் .

கொழும்பு மாவட்டத்தில் 1,640,946 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் .

இதேவேளை 2015 ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பின் பிரகாரம் குறைந்தளவிலான வாக்காளர்கள் வன்னி தேர்தல் மாவட்டத்தில் பதிவாகியுள்ளர்.

வன்னி மாவட்டத்தில் 2 இலட்சத்து 201 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்