வெளிநாட்டு தூதரகங்களில் பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

வெளிநாட்டு தூதரகங்களில் பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

வெளிநாட்டு தூதரகங்களில் பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 9:10 am

வெளிநாட்டு தூதரங்களில் பதவி வெற்றிடங்கள் நிலவுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தில் 25 அதிகாரிகளுக்கு நியமனங்கள் வழங்கியதாக வெளிவிவவகார பிரதியமைச்சர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் மேலும் பல வெற்றிடங்கள் காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்திலும் மேலும் 25 அதிகாரிகளை பணிக்கமர்த்த எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

வெளிநாட்டு தூதரகங்களில் பணிபுரிவதற்காக நடத்தப்படும் பரீட்சைகளில் சித்தியடைந்தவர்களுக்கே
புதிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக வெளிவிவவகார பிரதியமைச்சர் ஹர்ச டீ சில்வா தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்