லைலா, சுருக்கு வலைகளுக்கு அனுமதி வழங்கியமையைக் கண்டித்து புத்தளத்தில் கறுப்புக்கொடி போராட்டம்

லைலா, சுருக்கு வலைகளுக்கு அனுமதி வழங்கியமையைக் கண்டித்து புத்தளத்தில் கறுப்புக்கொடி போராட்டம்

லைலா, சுருக்கு வலைகளுக்கு அனுமதி வழங்கியமையைக் கண்டித்து புத்தளத்தில் கறுப்புக்கொடி போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 10:07 pm

லைலா மற்றும் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு அனுமதி வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து புத்தளம் மாவட்ட மீனவர்கள் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லைலா மற்றும் சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு கடற்றொழில் அமைச்சினால் அனுமதி வழங்கி சுற்று நிரூபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதினால் தமது வாழ்வாதாரம் பாதிப்படைவதாகத் தெரிவித்து கறுப்புக்கொடி போராட்டம் மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

மீனவர்கள் தமது இயந்திரப் படகுகளில் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டு கடற்றொழிலில் ஈடுபட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த சுற்று நிரூபம் ஒருவார காலத்திற்குள் மீளப்பெறப்படாத பட்சத்தில் நாடளாவிய ரீதீயில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு மீனவர்கள் தீர்மானித்துள்ளதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்