முப்படையினரிடமுள்ள காணிகள் குறித்து தகவல் திரட்ட கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி யாழ்ப்பாணம் விஜயம்

முப்படையினரிடமுள்ள காணிகள் குறித்து தகவல் திரட்ட கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி யாழ்ப்பாணம் விஜயம்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 9:27 pm

வட மாகாணத்தில் முப்படையினர் வசமுள்ள காணிகள் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி இன்று யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கு அமையவே அவர் அங்கு சென்றிருந்தார்.

வடக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன தலைமையில் அண்மையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணிகளின் விபரங்கள் மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பில் நேரடியாக சென்று ஆராய்ந்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைய, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ததுடன், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட அதிகாரிளுடன் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் முப்படைத் தளபதிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்