மரக்கறி வகைகளின் விலைகளில் வீழ்ச்சி

மரக்கறி வகைகளின் விலைகளில் வீழ்ச்சி

மரக்கறி வகைகளின் விலைகளில் வீழ்ச்சி

எழுத்தாளர் Staff Writer

27 Jan, 2016 | 7:55 am

யாழ்ப்பாணத்தில் உற்பத்தி செய்யப்பட்ட பெருந்தொகையான மரக்கறி வகைகள் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பச்சை மிளகாய், பீற்றூட், கரட், கறிவாழைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட 50 ஆயிரம் கிலோ காய்கறிகள் யாழ்ப்பாணத்தில் இருந்து தம்புள்ளைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறிகள் கொண்டுசெல்லப்படுவதினால் தம்புள்ளையில் மரக்கறி விலைகள் குறைத்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை அடுத்த சில தினங்களில் மேலும் பெருந்தொகை காய்கறி தம்புள்ளைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக யாழ். விவசாயிகள் கூறியுள்ளனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்