பெண் மீது மோட்டார் சைக்கிளை மோதிய பொலிஸ் கான்ஸ்டபிள்: பிடித்து ஒப்படைத்த மக்கள்

பெண் மீது மோட்டார் சைக்கிளை மோதிய பொலிஸ் கான்ஸ்டபிள்: பிடித்து ஒப்படைத்த மக்கள்

எழுத்தாளர் Bella Dalima

27 Jan, 2016 | 9:40 pm

மத்துகம, நவுத்துடுவ, அமுன வீதி சந்தியில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் செலுத்திய மோட்டார் சைக்கிளில் மோதி 79 வயதான பெண் ஒருவர் காயமடைந்தார்.

இந்த விபத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர் இன்று மத்துகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் விபத்து இடம்பெற்ற இடத்தை விட்டுச் செல்வதற்கு முற்பட்டமையினால் அங்கு நேற்றிரவு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

அதன் பின்னர், பொலிஸ் உத்தியோகத்தர் அவ்விடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்டுள்ளார்.

இதனால், அவரை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என பிரதேச மக்கள் தடுத்து வைத்திருந்தனர்.

மக்கள் தடுத்து வைத்திருந்த நிலையில், அந்த பொலிஸ் உத்தியோகத்தர் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் அருகில் இருந்த தேயிலைத் தோட்டம் ஒன்றில் மறைந்திருக்கும் போது அவரை மக்கள் மீண்டும் கண்டுபிடித்துள்ளனர்.

பின்னர் பொலிஸ் மோட்டார் சைக்கிளில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார்.

விபத்தில் காயமடைந்த பெண் கடுகஹஹேன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு ஒரு இலட்சம் பிணை விதிக்கப்பட்டதுடன், காயமடைந்த பெண்ணுக்கு 5000 ரூபா வழங்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்